கூட்டு அரசிலிருந்து வெளியேறுவது பற்றி எவருமே அறிவிக்கவில்லை – சபாநாயகர்

0

கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ விலகுவதாக உத்தியோகபூர்வமான எந்தவொரு அறிவிப்பும் தமக்கு வழங்கப்படவில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூர்ய நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கூட்டு அரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகிவிட்டது என ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here