யாழ்.பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு முன் ஒருவர் தற்கொலை முயற்சி

0

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் பணியாற்றும் சிறப்புத் தேவையுடைய ஊழியர் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றார். எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று, எனக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது. அதுதொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன்.

முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் , எந்த விதமான நடவடிக்கையும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு எடுக்கவில்லை. அந்தச் செய்தியால் நான் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். அதனால் எனது குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டு உள்ளது. இதற்கு மேல் நான் உயிருடன் வாழ விரும்பவில்லை” என்று தெரிவித்த அவர், தன் வசம் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்தார்.

அதன் போது அங்கிருந்தவர்கள் தற்கொலை முயற்சி மேற்கொண்டவரை காப்பாற்றி சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்தனர். பொலிஸார் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.