கூட்டணியை பலப்படுத்தும் சிவகார்த்தி

0

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் 2.0 படத்தில் பணியாற்றிய முக்கியக் கலைஞர்கள் இருவர் இணைந்துள்ளனர்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராசா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் ரவிக்குமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இன்று நேற்று நாளை மூலம் கவனம் பெற்ற ரவிக்குமார் இந்த படத்தையும் சைன்ஸ் ஃபிக்சன் பாணியில் இயக்கவுள்ளார். 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இந்த படத்தில் மேலும் இரு தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளதாக பிஹைண்ட்வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில், “2.0 படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிரவ்ஷாவும் கலை இயக்குநராக பணியாற்றிய முத்துராஜும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்” எனக் கூறியுள்ளனர். நிரவ்ஷா தமிழ், தெலுங்கு, இந்தி திரைத்துறையில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பில்லா, தெய்வதிருமகள், காவியத்தலைவன் ஆகிய படங்கள் இவர் ஒளிப்பதிவு செய்த முக்கியமான படங்களாகும். சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான வேலைக்காரன், விஜய் நடித்த மெர்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.