இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்களின் போராட்டம் தொடரும்!

0

பல்கலைக்கழகங்களின் போதனைசாரா ஊழியர்கள் நாடுமுழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுடன் இன்று இடம்பெற்ற பேச்சுக்களில் தெளிவான தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்து குழு தெரிவித்தது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும் சமயாசமய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நாடுமுழுவதும் கடந்த 28ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட உடன்பாட்டுக்கு இசைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உயர்மட்ட பதவிகள் நிரப்பப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமை உள்ளிட்டவற்றுக்கி எதிர்ப்புத் தெரிவித்தும் அவற்றை நிறைவேற்றக் கோரியுமே அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here