மலையாள ரீமேக்கில் ஜீவா

0

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் ஜீவா அடுத்ததாக மலையாளப் படமொன்றின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.

‘கலகலப்பு 2’ படத்திற்குப் பிறகு நடிகர் ஜீவா நடித்துள்ள ‘கீ’ படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி ஆகிய மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கொரில்லா படத்தில் நடித்துமுடித்திருக்கிறார். இந்த நிலையில் மற்றுமொரு புதிய படத்தில் ஜீவா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான ’ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ படத்தின் ரீமேக்காக உருவாகவிருக்கிறது. டினு பப்பச்சன் இயக்கியிருந்த இதில் ஆண்டனி வர்க்கீஸ், விநாயகன், செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதன் தமிழ் ரீமேக்கையும் டினு பப்பச்சனே இயக்க, ஆண்டனி வர்க்கீஸ் நடித்த கேரக்டரில் ஜீவா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.