பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

0

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பிரபுதேவாவை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்த்திபனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது 1993ஆம் ஆண்டு வெளியான உள்ளே வெளியே. பார்த்திபன் இயக்கி நடித்த அந்தப் படத்தில் அவரது முன்னாள் மனைவி சீதா இணைந்து நடித்திருந்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி, சில்க் ஸ்மிதா, ஐஸ்வர்யா, தளபதி தினேஷ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் பாடல்களும் வரவேற்புப் பெற்றன. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இதில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் பார்த்திபன், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், மம்தா மோகன் தாஸ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் அடுத்த படத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா, அடுத்து சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியாகின. மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனால் இந்தப் படம் எப்போது ஆரம்பமாகும் என்று உறுதியான தகவல் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here