அமைச்சரவை மறுசீரமைப்பின் முதல் பகுதி இன்று மாலை

0

கூட்டு அரசின் அமைச்சரவை மறுசீரமைப்பு முதல் பகுதி இன்று மாலை இடம்பெறும் என அறிமுடிகின்றது.

இரண்டாவது பகுதி வரும் 23ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையை மறுசீரமைப்பது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் கண்டிருந்தனர்.

இந்த நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் நேற்றிரவு பதவி விலகினர்.

அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இன்று மாலை புதியவர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here