திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனின் திருவிழா ஆரம்பம்

0

யாழ்ப்பாணம், திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (15) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 23ஆம் திகதி மாலை தங்கரதமும் , 24ஆம் திகதி மாலை திருமஞ்ச திருவிழாவும் , 25ஆம் திகதி மாலை திருக்கைலாய வாகனமும் , 27ஆம் திகதி சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 29ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலங்களில் வசந்தமண்டப பூஜை காலை 10 மணிக்கும் , மாலை 6.15 மணிக்கும் நடைபெறும்.

தேர் மற்றும் தீர்த்த திருவிழா அன்று காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here