உங்கள் முகத்தையே மறைக்கும் அளவுக்கு முகப்பரு பிரச்னையாக உள்ளதா? இதோ தீர்வு!

0

பதின் வயதில் பலருக்கும் ஏற்படும் பிரச்னை இது. சில நாட்கள் தோன்றி மறைந்துவிடும் பரு எனில் பரவாயில்லை. ஆனால் சிலருக்கு பரு எரிச்சலையும், முகத்தை விட்டு நீண்ட காலம் நீங்காமல் தொல்லைகளைத் தரும். அவர்களுக்கான எளிய தீர்வு இவை:

முகத்தை எப்போதும் சுத்தமாக, அழுக்கின்றி வைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை செயற்கை ஒப்பனைப் பொருட்கள் பயன்படுத்தாதீர்கள். உங்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று தெரிந்தும் அதனைப் பயன்படுத்தினால் முகத்தில் பாதிப்புக்கள் ஏற்படுவது நிச்சயம்.

முகச் சருமங்களில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் தோன்றலாம். வெயிலில் அடிக்கடி செல்லும் போது பருக்கள் உருவாகும் அதிகரிகும். வாரம் ஒருமுறை முகப்பருவை நீக்கும் ஃபேஸ்மாக்குகளை பயன்படுத்தலாம்.

ஜாதிக்காய் வசம்பு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்து அதில் பன்னீர் கலந்து பரு மீது தடவி வந்தால் பரு அமுங்கிவிடும். முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால் அதற்கான தடமும் மறைந்துவிடும்.

மேக் அப் பொருட்கள் அல்லது ஃபேஸ் வாஷ் பிராண்டுகளைப் பயன்படுத்தினால் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைத்துவிடுங்கள்.

பருவுடன் தேமலும் இருந்தால் அது சருமத்தை பாதிக்கும். பப்பாளி இலையைத் தேமலின் மீது தேய்த்து பப்பாளிச் சாறையும் தடவி வந்தால் தேமல் நீங்கும்.

வெந்தயக் கீரையை மசித்து முகத்தில் உள்ள பருக்களில் தடவவும். நன்றாக காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், சந்தனப்பவுடர் – 2 சிட்டிகை இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன் பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டிப்பார்க்காது.

சில நேரங்களில் முகப்பருக்கள் தோன்ற அவரவர் உடலில் சுரக்கும் ஹார்மோன் சமநிலையின்மையும் காரணம் என்பதால் சரும சிகிச்சை நிபுணர்கள் உங்களை ஹார்மோன் பரிசோதனைகளை எடுக்கச் சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.

முகத்திலும், முன் நெற்றிப் பகுதியிலும் பருக்கள் தோன்ற தலையில் இருக்கும் பொடுகும் ஒரு காரணம் என்பதால், உங்களது டெர்மட்டாலஜிஸ்டுகளை அணுகி உங்களது உடல்வாகு மற்றும் தோல் இயல்புக்குத் தக்கவாறு பொடுகு நீக்கி ஷாம்புக்களைப் பயன்படுத்துங்கள்.

உங்களது உடலிலும் பருக்களோ, இன்ஃபெக்ஷன்களோ இருக்கும் எனில் உடலை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்வான காட்டன் ஆடைகளைப் பயன்படுத்துவதே நல்லது.