இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு 32 கிலோ தங்கம் கடத்தல் – 6 பேர் சிக்கினர்

0

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 10 கோடி ரூபா இந்தியப் பெறுமதியில்
32 கிலோ எடை தங்கத்தை இந்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்ணடியில் ஒரு கும்பல் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவுக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மண்ணடியில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பையுடன் நடந்து வந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அவர், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 12.149 கிலோ கிராம் தங்கம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், தங்கத்தைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.

மண்ணடியில் உள்ள ஒரு விடுதிக்கு வந்த நபரிடமிருந்த பையைச் சோதனையிட்டதில் கடத்தல் தங்கம் 12 கிலோ இருந்தது தெரியவந்தது.

இலங்கையைச் சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து கடத்தல் தங்கத்துடன் சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்த இலங்கையைச் சேர்ந்தவரிடமிருந்து 8.1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

மூன்று சம்பவங்களிலும் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இந்திய மதிப்பிங் ரூபா 10.21 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here