தமிழ் இளையோரும் இராணுவத்தில் இணையவேண்டும் – யாழ். தளபதி கோருகிறார்

0

“தமிழ் இளையோரும் இராணுவத்தில் இணைந்து கொள்ளலாம். இராணுவத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்ற பதவியைப் பெறும் வாய்ப்பும் உங்களுக்கும் உள்ளது. அதனைத் தவறவிடாது நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணையவேண்டும்”

இவ்வாறு இராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இன்று முற்பகல் இலங்கை வேந்தன் கல்லூரியில் இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றும் போதே யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள் – நல்லவர்கள். எனினும் கடந்த 30 ஆண்டுகள் நீடித்த போர், வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்துவிட்டது.

தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்லபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள் பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள்.

எனவே தற்கால இளையோருக்கும் நான் ஒன்றை கூற வருகிறேன். இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள். இராணுவ வேலையும் ஒரு அரச வேலைதான்.

எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து இந்த நாட்டின் வளர்ச்சிக்கு சேவையாற்ற முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் பங்கேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here