வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு ஹற்றன் நஷனல் வங்கி வாழ்வாதார உதவி

0

வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் மத்திய வங்கியின் செயற்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை ஹற்றன் நஷனல் வங்கி வழங்கிவைக்கிறது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வரும் 16ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் வைபவத்தில் இந்த வாழ்வாதார உதவி திட்டம் 100 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஹற்றன் நஷனல் வங்கியின் வட பிராந்திய அலுவலகம் ஒழுங்கமைக்கும் இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளும் பங்கேற்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here