ஜ.பி.எல்லில் மூன்றாவது முறை சென்னை சம்பியன்

0

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) ‘ரி-20’ தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வோட்சன் சதம் விளாச 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

ஐ.பி.எல்., ‘ரி-20’ தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் ,  சண் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணித் தலைவர் தோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஹர்பஜனுக்குப் பதில் கரண் சர்மா வாய்ப்பு பெற்றார். ஹைதராபாத் அணியில் சகா (காயம்), கலீல் அகமது நீக்கப்பட்டு கோஸ்வாமி, சந்தீப் சர்மா இடம்பிடித்தனர்.

யூசுப் விளாசல்

ஹைதராபாத் அணிக்கு கோஸ்வாமி (5) ஏமாற்றினார். ஜடேஜா பந்தில் தவான் (26) ஆட்டமிழந்தார். கரண் சர்மா ‘சுழலில்’ அணித்தலைவர் வில்லியம்சன் (47) ஆட்டமிழந்தார். சாகிப் 23 ஓட்டங்கள் எடுத்தார்.

யூசுப் பதான் ‘மின்னல்’ வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தார். இவருக்கு கார்லோஸ் பிராத்வைட் பங்களிப்பு கிடைக்க, அணியின் ஓட்ட எண்ணிக்கை சிறப்பாக உயர்ந்தது. தாகூர் பந்தில் பிராத்வைட் (21) சிக்கினார்.

ஹைதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்களையிழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.

யூசுப் (45) ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கிடி, கரண் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

வோட்சன் மிரட்டல்

எட்டிவிடக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு டுபிளசி (10) சொதப்பினார். பின், இணைந்த வோட்சன், ரெய்னா அபாரமாக விளையாடினார். சந்தீப் வீசிய 13வது ஓவரில் மிரட்டிய வோட்சன் 3 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

பிராத்வைட் பந்தில் ரெய்னா (32) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய வோட்சன், ஐ.பி.எல்., அரங்கில் 4வது சதத்தை பதிவு செய்தார். ராயுடு ஒரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஷேன் வோட்சன் 117 ஓட்டங்களையும் ராயுடு 17 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

3

இரண்டு வருடங்கள் தடைக்குப் பின் இந்த ஆண்டு மீளவும் ஐபிஎல்லில் இணைந்த சென்னை அணி மூன்றாவது முறையாக (2010, 11, 18) கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் அதிக பட்டம் வென்ற அணிகளின் வரிசையில் மும்பையுடன் (3) முதலிடத்தை பகிர்ந்து கொண்டது.

2

இந்த ‘சீசனில்’ சென்னையின் வோட்சன் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். ஒட்டுமொத்தமாக, இந்த ‘சீசனில்’ பதிவான 5ஆவது சதம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here