போலிகளால் உள்ளே வந்த விஜய் சேதுபதி

0

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இன்னும் சில நடிகர்கள், நடிகைகள் செயல்பட ஆரம்பிக்கவில்லை. ஒரு சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே பல லட்சம் தொடர்பாளர்களை அவர்களது கணக்கில் வைத்திருக்கிறார்கள். இவற்றிலும் பாதிக்கும் மேல் போலியான தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழ் நட்சத்திரங்களைப் பற்றிய போலியான தொடர்பாளர்களின் விவரம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

இதனிடையே, ரஜினிகாந்திற்கு ஆதரவு தருவது போன்ற பதிவுடன் விஜய் சேதுபதி பெயரில் ஒரு பதிவு நேற்றிலிருந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. தமிழ் மக்களுக்காகவே குரல் கொடுக்கும் விஜய் சேதுபதிதான் அப்படி பதிவிட்டுள்ளார் என அந்த டுவீட் வேகமாகப் பரவியது. விஜய்சேதுபதி பெயரில் இது போல மேலும் சில போலி டுவீட் பதிவுகளும் நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றன. அவற்றிற்கு முடிவு கட்ட விஜய் சேதுபதியி ஒரிஜனல் கணக்குடன் நேற்று டுவிட்டரில் குதித்துவிட்டார். அவருடைய முதல் பதிவே போலி கணக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதாக இருந்தது.

இனி, விஜய்சேதுபதியிடமிருந்து சுவாரசியமான பல தகவல்களை அவருடைய டுவிட்டர் கணக்கில் பார்க்கலாம்.