காணாமற்போனோர் அலுவலகத்தின் முல்லை. கூட்டத்தை பெரும்பாலான உறவுகள் புறக்கணிப்பு

0
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை சந்திக்கும் காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை சந்திக்கும் காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர்

காணாமற்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களின் முல்லைத்தீவுக் கூட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களில் பெரும்பாலானோர் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் குறிப்பிட்டளவு உறவினர்களே பங்கேற்றனர்.

காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாளிய பீரிஸ் உள்ளிட்ட 7 ஆணையாளர்களும் இன்று சனிக்கிழமை முல்லைத்தீவுக்கு வருகை தந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 41 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். அத்துடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

எனினும் கூட்டத்தைப் புறக்கணித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த உறவுகள் 150க்கும் மேற்பட்டோர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.