யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ்களில் ஹெரோயின் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் சிக்கினார்

0

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் போதைப் பொருளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

“ஹலவெல பகுதியில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்” என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.