3,800 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

0

3 ஆயிரத்து 800 ஆசிரியர் புதிதாக நியமிக்கப்படுவர் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடாளுமன்றில் இன்று (7) தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் நியமனம், பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய வசதிகள் செய்து வழங்கப்படும்” என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிலுள்ள தமிழ்மொழிமூல தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணம் பணித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை கல்வி இராஜாங்க அமைச்சின் அலுவகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.யூ.ஹேமன்த பிரேமதிலக கல்வி அமைச்சின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் எஸ்.முரளிதரன் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிப்பாளர் இசட்.தாஜுடீன் உள்ளிட் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here