தொழிற்சங்க நடவடிக்கையால் தபால் திணைக்களத்துக்கு ரூபா 100 கோடி நிதி இழப்பு

0

தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் தபால் திணைக்களத்துக்கு ஆயிரத்து 20 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

6/2006 சுற்றறிக்கையில் உள்ளவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வலுயுறுத்தி தபால் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

நாடுமுழுவதுமுள்ள 24 ஆயிரம் தபால் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் தபால்கள் ஏற்றுக்கொள்ளல் மற்றும் விநியோகத்தல் பணிகள் முடங்கியுள்ளன.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம், 654 தபால் நிலையங்கள் மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மட்டும் ஒரு லட்சம் தபால்கள் மற்றும் பார்சல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நாடு முழுவதும் 13 இலடச்சத்துக்கு அதிகமான தபால்கள் தேங்கிக் கிடக்கின்றன.

இதன்மூலம் தினம் ஒன்றுக்கு 170 மில்லியன் ரூபா வீதம் 6 நாள்களில் ஆயிரத்து 20 மில்லியன் ரூபா நிதி இழப்பு தபால் திணைக்களத்துக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here