அமைச்சர் விஜயகலாவின் கருத்து அரசியலமைப்பை மீறுகிறதா? ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவுறுத்து

0

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா? என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் சட்ட மா அதிபருக்கு சபாநாயகர் கரு ஜயசூர்ய அறிவுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (3) கூடிய போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அத்துடன் நாடாளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்திற்கொண்ட சபாநாயகர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தில் அரசியலமைப்பை மீறுகின்றதா? என்று ஆராய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை மீறும் விதமான கருத்துக்கள் ஏதாவது இருப்பின் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்குமாறும் சட்ட மா அதிபருக்கு அறிவுருத்தியுள்ளார் – என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here