பழுதடைந்த மீன்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு

0


யாழ்ப்பாணத்தில் கடல் உணவு சந்தைகள் பலவற்றில் குறைந்த விலையில் எனக் கூறி, பழைய மீன்களையும் டைனமைட் வைத்து பிடிக்கப்பட்ட மீன்களையும் கலப்படம் செய்து விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழுதடைந்த மீன் வார நாள்களில் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகர, நகர மற்றும் பிரதேச சபை சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் எதுவித நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவதில்லை.


அதிகரித்த நிரம்பலால் மிஞ்சிய மீன்களை சேமித்து வைக்க குளிரூட்டப்பட்ட அறை சந்தையில் இல்லாமை தொடர்பில் மீன் வியாபாரிகளால் குற்றஞ்சாட்டுப்படுகிறது.