இளம் பெண் கூட்டு வன்புணர்வா? விசாரணையில் சாவகச்சேரி பொலிஸார்

0

கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்  சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் வீடோன்றிலிருந்து இளம் பெண் ஒருவரும் குடும்பத்தலைவர் ஒருவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.

இளம் பெண் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று  சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவரும் குடும்பத்தலைவர் ஒருவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.

காதலிப்பதாக ஏமாற்றி குடும்பத்தலைவர் ஒருவரால் அந்த இளம் பெண் ஒருவர் வீடொன்றுக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வீட்டுக்குள் அவர்கள் கள்ளத் தொடர்பில் இருப்பதாக குடும்பத்தலைவரின் மனைவியால் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அங்கு சென்ற பொலிஸார் இருவரையும் மீட்டனர்.

தன்னை குடும்பத்தலைவர் தகாத முறையில் நடத்தியதாகவும் வேறு இருவரும் தன்னை தகாத முறையில் நடத்த முற்பட்டனர் என்றும் இளம் பெண் தெரிவித்தார் என பொலிஸார் கூறினர்.

இளம் பெண் மருத்துவ சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போதனா வைத்தியசாலையில் ஆரம்ப மருத்துவ சோதனையின் பின் பெண் நோயியல் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here