மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பால் நோயாளர்கள் அவதி

0

சிங்கப்பூர் கூட்டு உடன்படிக்கைக்கு எதிராக நாடுமுழுவதும் அரச மருத்துவ அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை மருத்துவர்களும்
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
உள்ளிட்ட பலருக்கும் அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவற்றுக்கான தீர்வுகள் எவையும் இதுவரை பெற்றுத்தரப்படவில்லை
என தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடுமுழுவதும் இந்த போராட்டத்தக  மேற்கொண்டது.

இந்நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், மருத்துவ அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக வெளிநோயாளர் பிரிவு மருத்துவ சேவைகள் முடங்கின.

இதன் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு
வருகைதந்த நோயாளர்கள், மாதாந்த கிளினிக் பரிசோதனைக்கு வந்த நோயாளர்கள் என பலரும் சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்பியுள்ளனர்.