சகலரது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொழும்பில் பெற்றுக்கொள்ள முடியும்

0

நாட்டின் அனைத்துக் குடிமகளும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை இன்று செப்ரெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் கொழும்பு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நிமிடங்களுக்குள் இந்தச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

“சான்றிதழ்களை வழங்குவதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புதிய விநியோக பீடங்கள் இன்று முதல் இயங்கவுள்ளன.

இந்த முறைமையின் கீழ் 1960 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பிரதேச செயலாளர் அலுவலகங்களில் நிலவும் வேலைப்பளுவை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here