2018ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு

0

2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் வெளியிடப்படுகிறது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பும், செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் குழுவினர் இதனை வெளியிட்டனர்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜ் சிமித், பிரான்ஸின் பிரான்செஸ் ஆர்னால்ட் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிகோரி வின்டர் ஆகிய மூவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.

புரோட்டீன்கள் குறித்த புதிய ஆய்வுகளின் வழியாக மனித குலத்திற்கு உதவும் வகையில் உணவுப் பொருள்களை கண்டறிய உதவியதாக அவர்களுக்கு இந்த விருதானது பகிர்ந்து வழங்கப்படுகிறது.