இன்டர்போலின் தலைவரைக் காணவில்லை – அவரது மனைவி வழங்கிய முறைப்பாட்டால் பரபரப்பு

0

‘இன்டர்போல்’ என் அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச பொலிஸின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான ‘இன்டர்போல்’ அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை என்று மனைவி தற்போது முறைப்பாடு வழங்கி இருக்கிறார்.

முன்னதாக ‘இன்டர்போல்’ அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here