முகநூலின் புதிய வீடியோ அழைப்புக் கருவி!

அதிதிறன் கைபேசி (ஸ்மார்ட் போன்) அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இணையம் மூலமாக குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சமூக வலைத்தளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், வைபர், வட்ஸ் அப், கூகுள் மெசன்ஜர் ஆகியவற்றில் வீடியோ அழைப்புகளின் உபயோகமும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தள நிறுவனங்களான கூகுள், அமேசான் ஆகியவை செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் வகையில் ஸமார்ட் ஸ்பீக்கர்களைத் தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளன.

வீட்டின் மூலையில் இருந்து கொண்டு, காலையில் “குட்மோர்னிங்’ சொல்லி நம்மை எழுப்புவது முதல் நாட்டு நடப்புகளை வாசித்து, அலுவலகத்துக்கு வழியனுப்பி வைத்து, இரவு தூங்கப் போகும் வரை நம்மை வழிநடத்துவதுதான் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பணி.

இதற்குப் போட்டியாக முகநூல் நிறுவனம் ஏ.ஐ. வீடியோ அழைப்புக் கருவி “போர்ட்டல்’-ஐ அறிமுகம் செய்துள்ளது. வீட்டில் போட்டோ பிரேம் போல் எங்கேயாவது இந்த கருவியை வைத்து விட்டால் போதும். வீடியோ அழைப்பு வந்துவிட்டால் “ஹே போர்ட்டல்’ என்று சொன்னால் போதும், நாம் எங்கே இருக்கிறோமோ அந்தப் பகுதியை தானாகவே காண்பித்து வீடியோ அழைப்பைத் தொடங்கிவிடும்.

நடந்து கொண்டே பேசினாலும் நம்மைப் பின்தொடர்ந்து வந்து நமது பேச்சை இடையூறு இல்லாமல் வீடியோ அழைப்புப் பதிவு செய்கிறது இந்த “போர்ட்டல்’. இரண்டாவதாக புதிய நபர் வீடியோ அழைப்பை இணைந்தாலும் அவரையும் சூம் செய்து அவருடைய பேச்சையும் இணைக்கிறது இந்த கருவி.

இணையத்தள வீடியோக்களைப் பார்க்கவும், குழந்தைகளுக்கு குட்டிக் கதைகள் சொல்வதும் என பல அம்சங்கள் நிறைந்துள்ள இந்தக் கருவியில் உள்ள கமராவை மூடியும் வைக்கலாம்.

பொதுவாக வீடியோ அழைப்பில் பேச வேண்டும் என்றால் நாமே ஸ்மார்ட்போனை கையில் பிடித்துக் கொண்டு, அதற்கு முன் வந்துதான் பேச வேண்டும். ஆனால் இந்த புதிய கருவி போர்ட்டல் அந்தத் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது.

அமெரிக்காவில் இந்த கருவி விற்பனைக்கு வந்துள்ளது. 10 அங்குலம் திரை கொண்ட போர்ட்டல் கருவி 200 அமெரிக்க டொலராகவும் (சுமார் 35 ஆயிரம் ரூபா) 15 அங்குலம் திரை கொண்ட கருவியின் விலை 350 டொலராகவும் (சுமார் 45 ஆயிரம் ரூபா) விற்கப்படுகிறது.

என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை எட்டினாலும், அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்காமல் இருந்தால்தான் அனைவரின் வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!