தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு

0

இலங்கையில் தங்கத்தின் விலை மீளவும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 56 ஆயிரத்து 800 ரூபாவாக்க் காணப்பட்டது. எனினும் அதன் விலை திங்கட்கிழமை தொடக்கம் அதிகரித்தது.

இன்று வியாழக்கிழமை (18) தூய தங்கத்தின் விலை 57 ஆயிரத்து 400 ரூபாவால் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்துக்கு ஏற்பட்ட விலை அதிரிப்பே இந்த தீடீர் ஏற்றத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

புரட்டாதி மாதத்தில் சுப நிகழ்வுகள் இடம்பெறாததால் தங்கத்தின் விலையில் பெரியளவில் தளம்பல் ஏற்படவில்லை.

எனினும் ஐப்பசி மாதம் இன்று ஆரம்பமாகியதால் சுப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் அதன் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என தங்கம் இறக்குமதி செய்வோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்  இன்று 24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 57 ஆயிரத்து 400 ரூபாவாக அதிகரித்துள்ளது.

22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் இன்றைய விலை 52 ஆயிரத்து 450 ரூபாவாகக் உயர்வடைந்துள்ளது.