மகிந்தவின் மீள் வருகையால் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தால் அச்சமடைகின்றோம் – புத்திஜீவிகள் அறிக்கை

0

நெருக்கடி மிக்க ஒரு சூழலில் ஜனநாயகத்தினை வலியுறுத்தும் செயற்பாடுகளுக்கான அறைகூவல்
நாடாளுமன்றத்திலே மகிந்த ராஜபக்ச பெரும்பான்மை ஆதரவினைக் கொண்டிருக்காத ஒரு சூழலிலே அவரை ஆட்சி அமைக்கும் படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்திருக்கும் நிலையில் ஏற்பட்டிருக்கும் அண்மைக் கால அரசியல் மாற்றங்கள் குறித்து நாம் மிகவும் அச்சம் அடைந்திருக்கிறோம் என்று புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

“மகிந்த ராஜபக்வை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தமையும், பின்னர் நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி முடக்கியமையும், தற்போதைய நிலையில்மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றிலே பெரும்பான்மைப் பலம் அற்றவராக இருப்பதனையே சுட்டிக்காட்டுகிறது. நெருக்கடியான சூழ்நிலையினைப் பயன்படுத்தி அரசியல் குதிரைபேரம் இடம்பெறுவதற்கு வழிசெய்வதாகவே நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி முடக்கியமையினை நாம் நோக்குகின்றோம். அத்துடன் இதனை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு செயலாகவும், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரப் போக்குள்ள ஆட்சி அமைக்கும் செயன்முறையாகவுமே நாம் பார்க்கிறோம்” என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பில் நாட்டின் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் 138 பேர் கையொப்பமிட்டு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2015ஆம் ஆண்டு நல்லாட்சி மற்றும் மாற்றம் ஆகியவற்றினை வலியுறுத்தியே மக்கள் சிறிசேனவுக்கு வாக்களித்தனர். அதனை அடுத்து இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தனர். விக்கிரமசிங்க அரசும் சரி சிறிசேனவும் சரி தாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பிளவுகளை உருவாக்கும் வகையிலான‌ அரசியல் விசுவாசத்தினை வெளிப்படுத்தும் முயற்சிகளும், சுயநல நோக்கிலான சந்தர்ப்பவாதமும் கடந்த மூன்று வருடங்களாக நாட்டிலே கோலோச்சியது. தற்போது இடம்பெற்றிருக்கும் அரசியல் மாற்றம் இந்த போக்குக்களின் ஒரு முடிவே ஆகும்.

மக்கள் செயற்பாட்டுக்கான வெளிகளும், கருத்துச் சுதந்திரத்துக்கான வெளிகளும் விரிவு பெற்றமை, தகவல் அறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, இராணுவத்தின் பிடியில் இருந்த சில நிலங்கள் திருப்பி அளிக்கப்பட்டமை போன்ற சில சாதகமான மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னைய அரசின் பிரச்சினைக்குரிய திட்டங்களை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் வகையில் நல்லாட்சி அரசால் முன்னெடுக்கப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட இருக்கும் பயங்கரவாதத்தினை தடுக்கும் சட்டம் (CTA) போன்றன மக்களுக்கு எந்த மீட்சியினையும் வழங்கவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி ஒன்று எம்மைச் சூழவுள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையிலே நாடு பல்வேறு பக்கங்களில் இருந்தும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

மகிந்த ராஜபக்வை ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைத்தமையும், பின்னர் நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி முடக்கியமையும், தற்போதைய நிலையில்மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றிலே பெரும்பான்மைப் பலம் அற்றவராக இருப்பதனையே சுட்டிக்காட்டுகிறது. நெருக்கடியான சூழ்நிலையினைப் பயன்படுத்தி அரசியல் குதிரைபேரம் இடம்பெறுவதற்கு வழிசெய்வதாகவே நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி முடக்கியமையினை நாம் நோக்குகின்றோம்.

அத்துடன் இதனை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு செயலாகவும், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரப் போக்குள்ள ஆட்சி அமைக்கும் செயன்முறையாகவுமே நாம் பார்க்கிறோம். இது ஏற்கனவே நலிவுற்றுப் போயிருக்கும் நாட்டின் ஜனநாயகத் தளத்தினை மேலும் நலிவுறச் செய்கின்ற ஒரு செயலாகவும், எதிர்ப்பு, போராட்டம், மக்களுடைய கூட்டுப் போராட்டங்களுக்கு அபாய மணியினை அடிக்கும் ஒரு செயலாகவும் அமைகின்றது.

ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது தனியே அரசியல் அமைப்புடன் சம்பந்தப்பட ஒன்று அல்ல. அது பொருளாதார, சமூக, தனிநபர் மேம்பாட்டுடனும், எதிர்ப்பினை வெளியிடுவதற்கான உரிமையுடனும், பன்மைத்துவம் குறித்த எமது பற்றுறுதியுடனும் தொடர்புபட்ட ஒரு விடயம் ஆகும்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலின் அரசியலமைப்புக்கு முரணான தன்மையினை நாம் சுட்டிக்காட்ட வேண்டிய அதேவேளை, எங்களுடைய அக்கறைகள் இந்த அரசியலமைப்பு நெருக்கடிக்கு அப்பாலும் செல்கின்றன என்பதனை நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகபூர்வமான செயற்பாடுகள் எப்போதும் முன்னிறுத்தப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகிறோம். குறைவான தீய சக்திக்குத் (lesser evil) தொடர்ந்து ஆதரவு வழங்கும் அரசியல் உபாயத்தினைவிட நாட்டின் மக்கள் என்ற வகையில் அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றுதிரட்டி எமது கூட்டு எதிர்காலங்களுக்கான நம்பிக்கையினை நாம் கட்டியெழுப்புவோம்.

ஜனநாயகபூர்வமான செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கும்படி அதிகாரத்தில் இருக்கும் அனைவருக்கும், குறிப்பாக அரசியலில் செய‌ற்படும் எல்லோருக்கும், நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

அதேவேளை ஜனநாயகச் செயற்பாடுகளுக்கான எமது முழுமையான‌ ஆதரவினையும் நாம் வெளியிடுகிறோம். மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்களின் குழுக்கள், சமயக் குழுக்கள் உள்ளடங்கலாக சமூக நீதியினை வலியுறுத்தும் அனைவரும் இணைந்து எதேச்சாதிகார சக்திகளுக்கும், செயன்முறைகளுக்கும் எதிராக ஒரு கூட்டணியினையும் எதிர்ப்பு சக்தியினையும் உருவாக்குவதற்கான தருணம் இதுவே எனவும் நாம் நம்புகிறோம் – என்றுள்ளது.

1. Dr. Ranil Abayasekara University of Peradeniya
2. Ashani Abayasekara Research Officer, Institute of Policy Studies
3. Prof. Liyanage Amarakeerthi, University of Peradeniya
4. Dr. Harini Amarasuriya, Open University of Sri Lanka
5. Swasthika Arulingam
6. B. Aswini, Women’s Coalition for Disaster Management
7. Crystal Baines, University of Kelaniya
8. Dr. Lionel Bopage, Australian Advocacy for Good Governance in Sri Lanka (AAGGSL)
9. Anushaya Collure
10. Dr. P. A. D. Coonghe, University of Jaffna
11. Dr Enoka Corea University of Colombo
12. Marina Daniel
13. Prof. Kumar David, formerly University of Peradeniya
14. Marisa de Silva
15. Dr. S.J.S. de Mel, University of Peradeniya
16. Dr. Nirmal Ranjith Dewasiri, University of Colombo
17. Dr. Kanchuka Dharmasiri, University of Peradeniya
18. Geethika Dharmasinghe, Liberation Movement
19. Prof. Priyan Dias University of Moratuwa
20. Fr. T. L. Rohan Dominic, Claretians
21. Rasu Eeswaran, graduate student Michigan State University
22. Evan Ekanayake Faculty of Graduate Studies, University of Colombo
23. Ruki Fernando, Human Rights Activist
24. Priyantha Fonseka University of Peradeniya
25. Nilshan Fonseka
26. Sunila Galappatti
27. Mario Gomez, International Center for Ethnic Studies
28. Devaka Gunawardena, Collective for Economic Democratisation
29. Prof. Dileni Gunewardena, University of Peradeniya
30. Dr. Ranil Guneratne – Formerly University of Colombo
31. Tasneem Hamead
32. Dr. Farzana Haniffa, University of Colombo
33. Rohini Hensman – Writer, Independent Scholar
34. Kaushalya Herath, Lecturer
35. Dr. Rajan Hoole – formerly University of Jaffna and University Teachers for Human Rights
36. Deekshya Illangasinghe
37. Saman Ilangamuwa Journalist
38. Prof. Qadri Ismail
39. Mihiri Jansz, Lecturer, Open University of Sri Lanka
40. Sumedha Jayakody, The International Centre for Ethnic studies
41. Prabhath Jayasinghe
42. Dr.Prince Jeyadevan Professor of Chemistry, University of Jaffna
43. Dr. D.R. Jayewardene, University of Colombo
44. I. Jeyanthi, Women’s Coalition for Disaster Management
45. Rev. Dr. Joseph Jeyaseelan, Claretians, Sri Lanka
46. S. Jeyatheepa, Women’s Coalition for Disaster Management
47. Dr. Ahilan Kadirgamar
48. Dr. Ranga Kalugampitiya University of Peradeniya
49. Saman. M. Kariyakarawana Visiting Lecturer Univ. of Sabbaragamuwa
50. T. Karthika, Women’s Coalition for Disaster Management
51. Niyanthini Kadirgamar, graduate student University of Massachusetts
52. Dr. Pavithra Kailasapathy, University of Colombo
53. Chulani Kodikara, PhD Candidate
54. Rushira Kulasingham
55. Peace S. Kulasingham
56. Dr. Ramya Kumar, University of Jaffna
57. Dr. Shamala Kumar, Univ. of Peradeniya & University Teachers for Democracy & Dialogue
58. Dr. Vijaya Kumar, Professor Emeritus, University of Peradeniya
59. Prof. N. Savitri Kumar, Ph.D. Research Professor, Institute of Fundamental Studies
60. Prof. Amal S. Kumarage, University of Moratuwa
61. Kaushalya Kumarasinghe
62. Jayanthi Kuru-Utumpala
63. Dr. Vivimarie VanderPoorten Medawattegedera, Open University of Sri Lanka
64. Dr. Saumya Liyanage University of Visual and Performing Arts
65. Rita Liyanage, Formerly Univ. of Peradeniya
66. Dr. Prabha Manuratne, University of Kelaniya, University Teachers for Free Education
67. Dr. Sudesh Mantillake University of Peradeniya
68. Saravanabavan Mayuran – Government Surveyor
69. Achala Meddegama, Entrepreneur/ Environmental Conservationist
70. Juwairiya Mohideen
71. Rumala Morel – Faculty of Medicine, University of Peradeniya
72. Thulasi Muttulingam, Journalist, Jaffna
73. Sabreena Niles, Lecturer, University of Kelaniya
74. Afrah Niwas
75. Dr. Gehan Panagoda, University of Peradeniya
76. Buddhima Padmasiri, Lawyer
77. Thadchaigeni Panchalingam, graduate student at The Ohio State University
78. Chaminda Perera, Assistant General Secretary, Ceylon Federation of Trade Unions
79. Nicola Perera, University of Colombo
80. Vihanga Perera
81. Ramindu Perera – Open University of Sri Lanka
82. Muthulingam Periyasamy, Institute for Social Development, Kandy
83. Thiagi Piyadasa, Lawyer
84. K. Rajaledsumi, Women’s Coalition for Disaster Management
85. Rajany Rajeshwary, Feminist
86. Sumathy Rajasingham
87. Sanjayan Rajasingham, Graduate Student, Yale University
88. Vasuki Rajasingham, Principal, Nuffield School, Kaithady
89. R. Rajiththa, Women’s Coalition for Disaster Management
90. B. Rakini, Women’s Coalition for Disaster Management
91. Dr Harshana Rambukwella, Open University of Sri Lanka
92. Sandamini Ranwalage, graduate student University of Miami
93. Madhubhashini R. Rathnayaka
94. Dr. Champa Ratnatunga, University of Peradeniya
95. Peter C. D. Rezel, Strategic Inspirations (Pvt.) Ltd, Boralesgamuwa
96. Dr. Kanchana N. Ruwanpura
97. Athulasiri Samarakoon, Open University of Sri Lanka
98. Dr. Dinesha Samararatne, University of Colombo
99. Prof. Gameela Samarasinghe, University of Colombo
100. T. Sangeetha, Women’s Coalition for Disaster Management
101. S. Sasiyanthini, Women’s Coalition for Disaster Management
102. R. Sathanayaki, Women’s Coalition for Disaster Management
103. Shreen Saroor, Women’s Action Network
104. Muttukrishna Sarvananthan, Pointpedro Institute of Development
105. Sharmila Seyyid
106. Fathima Shahira
107. Dr. Jani De Silva, Independent Researcher
108. Vanie Simon Social Activist
109. Priyalal Sirisena, Attorney-at-Law
110. Prof. Sumathy Sivamohan University of Peradeniya
111. Esther Surendraraj University of Colombo
112. Rev. Jude Sutharshan, Principal, Christian Theological Seminary, Chunnakam
113. Prof. V. Thevanesam, University of Peradeniya
114. Dayapala Thiranagama
115. Mahendran Thiruvarangan – University of Peradeniya
116. Dr. Darshi Thoradeniya Visiting Lecturer, Dept. of History, University of Colombo.
117. Sandun Thudugala, Social Activist
118. Tanuja Thurairajah
119. Dr. Ramila Usoof, University of Peradeniya
120. Nelum Uttamadasa
121. Deanne Uyangoda
122. Prof. Jayadeva Uyangoda, University of Colombo
123. S Vijiyaledsumi, Women’s Coalition for Disaster Management
124. Thiyagaraja Waradas
125. Amali Wedagedara, graduate student University of Hawaii
126. Devaka Weerasinghe, University student, University of Sri Jayewardenepura
127. Natasha Weerasinghe, Art teacher/home maker
128. Dr. Ruvan Weerasinghe, University of Colombo School of Computing
129. Prof. Carmen Wickramagamage University of Peradeniya
130. Prof. P. Wickramagamage (Emeritus Professor) University of Peradeniya
131. Upul Kumara Wickramasinghe, graduate student at the University of Durham
132. Prof. Nira Wickramasinghe, Leiden University (formerly University of Colombo)
133. Dr. Sinha Wickremesekera, Medical Doctor
134. Priyan R. Wijebandara Independent Journalist and Visiting Lecturer
135. Asanka Wijesinghe, Graduate Student, The Ohio State University
136. Subha Wijesiriwardena Women and Media Collective
137. Lal Wijenayake – Convener, Lawyers for Democracy
138. Dileepa Witharana, Open University of Sri Lanka
139. Setheeswary Yogathas, Women’s Coalition for Disaster Management

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here