எரிபொருள் சூத்திரம் இன்றுடன் நீக்கப்படும் – மகிந்த அணி அறிவிப்பு

0

எரிபொருள் விலைச் சூத்திரம் இன்று முதல் நீக்கப்படும் என்று மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கூட்டு அரசின் எரிபொருள் விலைச் சூத்திரம் கடந்த மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு மாதம் 10ஆம் திகதியும் எரிபொருள்களின் விலை மாற்றமடைகிறது.

புதிய பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் மகிந்த நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது அரசின் கீழ் எரிபொருள் விலைச் சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் அதனை இன்றுடன் நீக்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.