பெற்றோலின் விலை 10 ரூபாவால் குறைப்பு – நிதி அமைச்சர் மகிந்த அதிரடி

0

பெற்றோலின் விலை 10 ரூபாவாலும் டிசெலின் விலை 7 ரூபாவாலும் இன்று (1) வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 145 ரூபாவாகவும் டிசெலின் விலை 116 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கு சிறிய விவசாய இயந்திரங்களுக்கும் பயன்படுத்தப்படும் 2T லிகிசி எரிபொருள் உள்ளிட்ட லிகிசி ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுகின்றது.

இதனுடன் எரிபொருளின் விலையை தீர்மானிப்பதாக மாதாந்தம் முன்னெடுக்கப்படவிருந்த விலை சூத்திரத்திற்கு பதிலாக நடைமுறையிலான விலை முறை முன்னெடுக்கப்படவுள்ளது என்று நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.