மைத்திரி, மகிந்த, ரணில் ஒரே மேசையில் கூடி ஆராய்வு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரமதர் மகிந்த ராஜபக்ச மற்றும் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஒரே மேசையில் கூடி பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பேச்சுக்கள் இன்று மாலை 5.20 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் மகிந்த ஆதரவு சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படுகின்றன.

சபாநாயகர் கரு ஜெயசூர்ய மற்றும் ஜேவிபியினர் இந்தக் கூட்டத்தை நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here