புதிய நாணயக்குற்றிகள் வெளியீடு

0

இலங்கை மத்திய வங்கியால் புதிய 1, 5 மற்றும் 10 ரூபா முகப் பெறுமதியுடைய நாணயக் குற்றிகள் இன்று வௌயியிடப்பட்டுள்ளது. அவை வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வங்கிகள் ஊடாக பாவனைக்குவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டிற்கு அது ஆற்றிய அரும் பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதத்திலும் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை வெளியிட்டிருக்கின்றது.

முதலாவது நாணயக் குத்தி உத்தியோகபூர்வமாக பிரதமரும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான மகிந்த ராஜபக்சவிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியால் இன்று 27ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்நாணயக் குத்தியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன் சேர்ந்து கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகவிருக்கும் – என்றுள்ளது.