அமைச்சுக்களை முடக்கும் பிரேரணை நிறைவேற்றம்

0

மகிந்த ராஜபக்ச அரசின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பிரத்தியேக அலுவலர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 122 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக எந்தவொரு வாக்குமளிக்கப்படவில்லை.

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான நிதிஒதுக்கீட்டை இரத்துச் செய்வதற்கான பிரேரணை நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்டமாக அமைச்சர்களின் செயற்பாட்டை முடக்கும் பிரேரணை இன்று நிறைவேற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 148ஆவது பிரிவின் கீ்ழ் நாடாளுமன்றமே அரச பொது நிதியை கட்டுப்படுத்துகிறது.

எனவே, கடந்த 15ஆம் திகதிக்குப் பின்னர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பிரத்தியேக அலுவலகர்களுக்கான சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகளை பொது நிதியில் இருந்து வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என்று பிரேணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here