அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்

0

நம்மில் பலருக்கு நமக்குப் பிடித்த நடிகர் நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய இந்தியப் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளில் சாதித்த, அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்த ஆண்டு (2018) அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டு இவர் 253 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) சம்பாதித்துள்ளார். 228 கோடி ரூபாய் சம்பாதித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். நடிகர் அக்‌ஷய் குமார் 185 கோடி ரூபா சம்பாதித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். தீபிகா படுகோனே நான்காவது இடத்திலும், தோனி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரின் ஆண்டு வருமானம் 50 கோடி ரூபாயாகும். நடிகர் விஜய் 26ஆவது இடத்தில் இருக்கிறார். அவரின் ஆண்டு வருமானம் 30.33 கோடி ரூபாயாகும்.
நடிகர் விக்ரம் 26 கோடி ரூபாய் சம்பாதித்து 29-வது இடத்தில் உள்ளார். நடிகர் சூர்யாவும் விஜய் சேதுபதியும் 34வது இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரின் ஆண்டு வருமானம்23.67 கோடி ரூபாயாகும். நடிகர் தனுஷ் 17.25 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடன் 53-வது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழ் நடிகை நயன்தாரா. அவரின் ஆண்டு வருமானம் 15.17 கோடி ரூபாயாகும். பட்டியலில் அவர் பிடித்திருக்கும் இடம் 69.

இந்தப் பட்டியலில் நடிகர் அஜித்தின் பெயர் இடம்பெறவில்லை. ஆக, ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி ஆகியவர்கள் அதிக சம்பளம் வாங்கும் முதல் 5 தமிழ் நடிகர்கள்.