ஒரு மணிநேரத்துக்குள் உருவான ஈழத் தமிழர் எழுதிய பாடல்!’ – இது வேற லெவல் `தூக்குதுரை’

0
அஸ்மின்

அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும்
விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றது. ஆனால், கடந்த இரண்டு தினங்களாக விஸ்வாசம்’ படத்தில் இல்லாத ஒரு பாடல், அஜித் ரசிகர்களுக்கிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஏற்று நடித்திருக்கும் தூக்குத்துரை என்கிற கதாபாத்திரத்துக்கான ஓப்பனிங் பாடலை தான் எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அஸ்மின் எழுதிய அனுப்பிவைத்த பாடல்தான் அது.

இவர் விஜய் ஆண்டனி நடித்த நான்’ படத்தில்
ப்பெல்லாம் தப்பே இல்லை…’ என்கிற பாடலை எழுதியவர். அதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, இவர் எழுதிய வானே இடிந்ததம்மா…’ பாடல் பல நாள்களாகத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சமாதியில் ஒலிபரப்பப்பட்டது.

இவர் தூக்குத்துரைக்காக எழுதிய பாடல் வரிகள் முகநூலில் நல்ல வரவேற்பைப் பெற, அதற்குப் பின் இசையமைப்பாளர் தஜ்மீல் செரீப் உதவியுடன் அந்தப் பாடல் வரிகளைப் பாடலாகவும் மாற்றினார். பாடல் வரிகளுக்கு கிடைத்த அதே ரெஸ்பான்ஸ், தற்போது பாடலுக்கும் கிடைத்து வருகிறது.

https://youtu.be/ow6S9CCSubM

இதைப் பற்றி அஸ்மினிடம் பேசும்போது, “எந்த வித பணச்செலவும் இல்லாமல் சாதாரணமாக ஒரு மணி நேரத்துக்குள் இந்தப் பாடலை உருவாக்கினோம். அஜித் ரசிகர்கள் பலர் எங்கள் உழைப்பை பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.