`என் கதைல நான் வில்லன்டா!’ – அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர்

0

இயக்குநர் சிவா – அஜித் கூட்டணியில் நான்காவதாக உருவாகியிருக்கும் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.


வீரம்’, வேதாளம்’, `விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் – சிவா காம்போவில் உருவாகிவரும் நான்காவது படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்துடன் இணைகிறார் நயன்தாரா.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை வெற்றி மேற்கொள்ள, ரூபன் படத்துக்கு எடிட்டிங் செய்திருக்கிறார். தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஸ்வாசம் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

டிரெய்லர் இன்று நண்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் ரேஸில் இருக்கும் விஸ்வாசம் படத்தில் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.