தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எகிறுகிறது

0

நாட்டில் 24 கரட் தூய தங்கத்தின் விலை 64 ஆயிரத்து ரூபாயாக அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பதால் இலங்கையில் கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்கிறது.

உலக சந்தையில் தற்போது நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துச் செல்வதால் இலங்கையில் அதன் விலை 70 ஆயிரம் ரூபாயாக உயர்வடைவதற்கு வாய்ப்புள்ளது என்று தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

24 கரட் பிஸ்கட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 64 ஆயிரம் ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 58 ஆயிரத்து 650 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.