மைத்திரியின் அரசியல் நகர்வால் தமிழர்கள் ஏமாற்றம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

0

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய அரசியல் நகர்வுகள் காரணமாக இலங்கையில் 3 தசாப்தகாலம் நீண்ட போரால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், தம்முடைய நீதிக்காக அருகிவரும் நம்பிக்கைகள் மேலும் காலதாமதம் ஆகுவதை கண்டுகொண்டுள்ளனர்”

இவ்வாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கையை வெளியிட்டு வைத்தபோதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ஜனாதிபதியினுடைய அரசியல் நகர்வுகள் காரணமாக இலங்கையில் 3 தசாப்தகாலம் நீண்ட போரால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், தம்முடைய நீதிக்காக அருகிவரும் நம்பிக்கைகள் மேலும் காலதாமதம் ஆகுவதை கண்டுகொண்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டினை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலமையானது வலுவிழக்கச் செய்துள்ளது.

இந்த துயர சம்பவமானது, பொறுப்பு கூறல் தொடர்பிலே சிறிசேனவின் அரசு விரைவானதும் அர்த்தபூர்வமானதுமான நகர்வுகளை எடுக்க தவறி விட்டத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றது.

நீதி வழங்கல் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடப்பாடு அரசியல் நெருக்கடியினால் வலுவிழந்துள்ள நிலையில் நீண்டகாலமாக துன்பங்களை அனுபவித்துவரும் மக்கள் தொடர்பான தமது கடப்பாடுகளை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பில் இலங்கையின் நட்புறவு நாடுகள் மற்றும் அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்க வேண்டும்” என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.