கரவெட்டி பிரதேச மக்களை திரும்பிப்பார்ப்பார்களாக எம்.பிக்கள்?

0

கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் பிரதேச செயலரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தமக்கு நெருக்கமானவர்களை தெரிவு செய்து வருவதாகவும் மழை காலங்களில் வசிக்க முடியாத குடிசைகளில் வாழும் பலரை அவர்கள் புறக்கணித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் யாழ்ப்பாண மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதேச மக்கள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவினை கரவெட்டி பிரதேச செயலக அதிகாரிகள் விதிமுறைகளுக்கு முரணாக முன்னெடுத்துள்ளனர். பயனாளிகளின் முதலாவது பெயர் பட்டியலை மட்டுமே பிரதேச செயலகத்தினர் வெளியிட்டுள்ளனர். பின்னர் எவ்வித அறிவுப்புகளும் இன்றி பிரதேச செயலராலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாலும் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை எதிர்வரும் இன்று அத்திபார நாட்கல்லினை நடுமாறும் கூறப்பட்டது.

இவை தவிர கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை கூட்டுமாறு பிரதேச செயலரிடம் பல தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதுவரையில் கரவெட்டி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு/ அபிவிருத்தி குழு கூட்டத்தினை கூட்டாது காலம் கடத்தப்படுகிறது.

எனவே இந்த விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here