மகிந்தவின் இளைய புதல்வர் ரோகித திருமண பந்தத்தில் இணைவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித ராஜபக்ச – டட்யனவும் இன்று திருமணபந்தத்தில் இணைந்துகொண்டனர்.

திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை தங்காலை – வீரகெட்டியவில் இடம்பெற்றது.

தனது சகோதரரின் திருமணத்திற்கு நாமல் ராஜபக்ச தனது கீச்சகப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்பு

ஆளும் – எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வியாபாரிகள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சிங்கப்பூருக்குப் பயணமாகிய நிலையில் நேற்றுமுன்தினமிரவு மகிந்த ராஜபக்சவின் இல்லத்துக்குச் சென்று மணமக்களை வாழ்த்தியிருந்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் 3 புதல்வர்களில் இளையவரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?
Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!