வடக்குக்கு புதிதாக 70 தாதிய உத்தியோகத்தர்கள் நியமனம் – இன்றைய பட்டமளிப்பு விழாவிலேயே கடிதம் வழங்கப்பட்டது

0

தாதியப் பயிற்சி நெறியை நிறைவு செய்த 70 பேருக்கு வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்டது.
நாடுமுழுவதும் ஆயிரத்து 660 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்டது. அதில் 70 பேருக்கு வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்டது என்று சுகாதார அமைச்சின் தாதிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் திருமதி ரஜிலாதேவி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

“2014ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் தாதிய பயிற்சி நெறிக்கு இணைந்து 5 ஆண்டுகள் கற்கையை நிறைவு செய்த ஆயிரத்து 660 தாதிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.

முதன்முறையாக சுகாதார அமைச்சின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவின் நிதியில் தாதிய மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இம்முறை நடத்தப்பட்டது. இன்றைய தினமே அவர்களுக்கான நியமனமும் சுகாதார அமைச்சர் மருத்துவர் ராஜித சேனரட்னவால் வழங்கிவைக்கப்பட்டது.

ஆயிரத்து 660 பேரில் 70 பேருக்கு வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 தாதியர்களுக்கு வெற்றிடம் உள்ளபோதும் உடனடியாக அதனை நிறைவு செய்ய முடியாது.

அதனால் 70 பேரில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று சுகாதார அமைச்சின் தாதிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர் திருமதி ரஜிலாதேவி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here