ஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

அரச மற்றும் தனியார் வங்கிகளில் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரம் (ஏ.ரி.எம் ) ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிதி மோசடி தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்களில் ஹக் செய்யும் வசதியைக் கொண்ட கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் மோசடிக் கும்பல் ஒன்றால் சேகரிக்கப்பட்டுள்ளன.


அந்த தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து பணம் பெறப்படுவதாக பொலிஸில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபா மோசடி இடம்பெற்றதால் விசாரணை நடத்தும் பணி குற்றத்தடுப்புத் திணைக்களத்தினர் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்த நிறுவனமான லங்கா க்ளியர் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


அரச மற்றும் தனியார் வங்கிகளில் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திங்கள் ஊடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும்போது அவதானத்துடன் செயற்படுமாறு, வாடிக்கையாளர்களுக்கு லங்கா க்ளியர் நிறுவனம் அறிவித்துள்ளது.


தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரத்தைப் பயன்படுத்துவோர் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்கள் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.


-நிதி கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்தப்படும் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரத்தில் அநாவசியமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை, கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதற்கு முன்னர் ஆராயுங்கள்.


தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரம் ஊடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகையில், உங்களை சூழவுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.


சந்தேகத்திற்கிடமான பொருள் அல்லது நபர்கள் தொடர்பில், வங்கியின் பாதுகாப்புப் பிரிவு அல்லது பொலிஸாருக்கு அறிவியுங்கள்.


தன்னியக்க பணப் பரிமாற்றல் இயந்திரத்தைப் பயன்படுத்தும் அனைவரும், தமது வரவு மற்றும் செலவு (டெபிற் மற்றும் கிரடிட்) அட்டைக்குரிய வங்கியில், கொடுக்கல் வாங்கலுக்கான குறுந்தகவல் அறிவித்தலை செயற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் லங்கா கிளியர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!