புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி பருத்தித்துறையில் முன்னெடுப்பு

0

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு  “புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி” இன்று சனிக்கிழமை காலை வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.

செலான் வங்கியின் அனுசரணையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும்   வடமராட்சி வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து இந்த பேரணியை முன்னெடுத்தன.

நெல்லியடியிலுள்ள செலான் வங்கிக் கிளை முன்பாக ஆரம்பமான பேரணி பருத்தித்துறை பிரதான வீதியூடாகச் சென்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் செலான் வங்கியின் உத்தியோகத்தர்கள், கல்வி அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.