தங்கத்தின் விலை இன்று திடீர் ஏற்றம்

0

இலங்கையில் தங்கத்தின் விலை மீளவும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று அதன் விலை திடீரென 400 ரூபாவால் அதிகரித்தது.

கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 64 ஆயிரத்து 800 ரூபாவாகக் காணப்பட்டது. அதன் விலை இன்று முற்பகல் 64 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. எனினும் நண்பகல் அதன் விலை 64 ஆயிரத்து 200 ரூபாவாக அதிகரித்தது.

இன்று திங்கட்கிழமை (18) தூய தங்கத்தின் விலை 64 ஆயிரத்து 200 ரூபாவாக  அதிகரித்துள்ளது. உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்துக்கு ஏற்பட்ட விலை அதிரிப்பே இந்த தீடீர் ஏற்றத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

22 கரட் தங்கத்தின் ஒரு பவுணின் இன்றைய விலை 58 ஆயிரத்து 850 ரூபாவாகக் உயர்வடைந்துள்ளது.

கடந்த மாதம் 65 ஆயிரம் ரூபாவரை அதிகரித்த தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்ததால் இந்த மாத ஆரம்பத்தில் 2 ஆயிரம் ரூபா குறைவடைந்து 63 ஆயிரமாக்க் காணப்பட்டது. எனினும் கடந்த 5 நாள்களின் அதன் விலை ஆயிரத்து 200 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.