போலி முகநூல் கணக்கில் பொலிஸாரை விமர்சித்த இளைஞன் கைது

0

பிடிகல பொலிஸ் நிலையம் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

துசான் சத்துரங்க என அறியப்படும் அந்த இளைஞன், போலியான முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்து இவ்வாறு அவதூறு பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செயலால் பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது என இளைஞனுக்கு எதிராக குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.