இலங்கை அதிரடி ஆரம்பம்: வெற்றிக்கு 137 ஓட்டங்கள் தேவை

0

197 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் அதிரடியாக இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களையிழந்து 60 ஓட்டங்களை எடுத்தது.

இதன்மூலம் இரண்டாவது டெஸ்ட்டை வென்று தென்னாபிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வெள்ளையடிக்க இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் 137 ஓட்டங்கள் தேவை.

ென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகள் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் நேற்று (21) வியாழக்கிழமை போர்ட் எலிசபத் மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலாவது இன்னிங்ஸில் 222 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிந்தது.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களையிழந்து 60 ஓட்டங்களை எடுத்திருந்த்து.

இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. எம்புல்தெனிய காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அதனால் இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களையிழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது.

முதலாவது இன்னிங்ஸில் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

லக்மல் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரின் துல்லியமான பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையுமிழந்த்து.

இதன்மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 197 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்தது.

பதிலுக்கு இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப ஜோடி திரிமன்ன – கருணாரட்ன அதிரடி ஆரம்பத்தை வழங்கினர். இந்த ஜோடி 32 ஓட்டங்களைச் சேர்த்த போது திரிமன்ன 10 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் கருணாரட்ன 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த ஒசாட பெர்னாண்டோ – குசல் மென்டிஸ் ஜோடியும் சிறப்பாக ஆட இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களையிழந்து 60 ஓட்டங்களை எடுத்தது.

களத்தில் ஒசாட பெர்னாண்டோ 17 குசல் மென்டிஸ் 10 ஓட்டங்களுடன் உள்ளனர்.

தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இலங்கை அணி வரலாறு படைக்க 137 ஓட்டங்கள் தேவை. எம்புல்தெனிய போட்டியிலிருந்து விலகிய நிலையில் 7 விக்கெட்டுக்கள் கைவசமுள்ளன.