கிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவிக்க முன்னரே திட்டமிடப்பட்டதா?

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடி கதைக்கும் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றைய தினம் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் , யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

மேலும் ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை பிடுங்கி வீசியும் , ஊடகவியலாளர்கள்  போராட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் அச்சுறுத்தியும் இருந்தனர்.

இவ்வாறாக குழப்பத்தில் ஈடுபட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர்கள் எனவும் , இவ்வாறே தமது போராட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் , போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய கறுப்பு சட்டை அணிந்த நபர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடும் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதேவேளை போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்த முதலே அந்தக் கலந்துரையாடல் நடந்தப்பட்டதாகவும் , அதன் பின்னரே அந்த நபர்கள் குழப்பத்தில் ஈடுபட்டதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!