பாகிஸ்தான் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்; பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.. இந்த தாக்குதலில் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள பாகிஸ்தான், எவருமே கொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் இந்திய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது. 

இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிப்பதற்காக 1000 கிலோ எடையுள்ள வெடிபொருள் வீசப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு போர் விமானம் மிராஜ் 2000 விமானங்கள் 12 பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இந்திய இராணுவத்தின் தகவல் தெரிவித்துள்ளன.

சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. எல்லோருமே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மறுப்பு

இந்தியா தாக்குதல் நடத்தியதை ஒப்புகொண்டுள்ள பாகிஸ்தான், யாரும் கொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட முசாபராபாத் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு மிகவும் வலுவான ஆயுதப்படையாகும்.

இந்திய பாதுகாப்புச் செயலரின் அறிவிப்பு

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்..

“இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த பல பயங்கரவாதிகள், மூத்த கொமாண்டர்கள், பயிற்சியாளர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டனர். இந்த முகாம், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உஸ்தாத் கெளரியால் தலைமை வகிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஜெய்ஷ் இ முகமது குறித்து பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து அதனை மறுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எந்தவித திடமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை” என்றும் இந்திய பாதுகாப்புச் செயலர் தெரிவித்தார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!