இந்து மத நம்பிக்கையுள்ள புலிகளே ஆரம்பத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தினர் – பாக். பிரதமர்


“அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பாகவே தற்கொலை குண்டுவெடிப்பில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்து மத நம்பிக்கையை சேர்ந்தவர்கள்” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இன்று மாலை உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தற்கொலை குண்டு தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம். அதற்கு மதச்சாயம் பூசமுடியாது. ஆனால், இந்த தந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான உண்மையான காரணிகளைத் தேடவேண்டும்” என்று அவர் உரையில் குறிப்பிட்டார்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளே தற்கொலைக் குண்டுத் தாக்குதலை முன்னெடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையிலே இந்து சமயம் மீது இந்தச் சாட்டுதலை இம்ரான்கான் முன்வைத்துள்ளார்.

கடந்த சில நாள்களில் நடந்துவரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நிகழ்வுகளில் பாகிஸ்தான் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதத்தை பாராட்டினார் இம்ரான்கான்.

“பாகிஸ்தான் ஊடகத்தின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், இந்திய ஊடகம் குறித்து இப்படி சொல்ல முடியாது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய ஊடகம் போரை ஆதரித்து பிரசாரம் செய்வது தொடர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.

“பாகிஸ்தான் எச்சரிக்கையோடும், சுய கட்டுப்பாட்டுடனும் நடந்துகொண்டது. இந்திய அத்து மீறலுக்கு பதிலடி தந்ததுகூட, எங்கள் இறையாண்மையை காத்துக்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என்பதைக்காட்டத்தான்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனையில், இறுக்கமும், பதற்றமும் அதிகரிப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மக்களுக்கு ஒரு கேள்வி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள அடிப்படைப் பிரச்சினை காஷ்மீர். இந்நிலையில் இந்திய மக்களுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் “இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீங்கள் கடைபிடித்துவரும் ஒடுக்குமுறைக் கொள்கை இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவுமா, மோசமாக்க உதவுமா?” என்று இம்ரான்கான் கேள்வி எழுப்பினார்.

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

உங்களுக்கு பிடித்தவாறே உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்த்தெடுக்க…

காணத் தவறாதீர்கள் – நம் ஊர் மரசெக்கு

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!