Breaking News

சொத்துக்களுக்காக சித்திரவதைக்கு உள்ளாகுபவரை அதிகாரிகள் மீட்பார்களா?

வடமராட்சி பருத்தித்துறையில் மனநலன் பாதிக்கப்பட்டவரின் சொத்தை அபகிரிப்பதற்காக அவருக்கு தொடர்ச்சியாக சித்திரவதை இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி லிங்கேஸ்வரன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவரே அவரது உறவினர்கள் எனக் கூறுபவர்களால் சித்திரவதைக்குள்ளாகின்றார்.

இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.

இவருக்கு ஏராளமான பூர்வீகச் சொத்துக்கள் உள்ளன. இவரை  பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருகின்றனர்.

இது தொடர்பாக அந்தக் கிராமத்துக்கு பொறுப்பான (J411) பெண் கிராம சேவகருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் எந்தவித நடவடிக்கைகளையும் கிராம சேவகர் எடுக்கவில்லை.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்களால் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

நலன்விரும்பி

Loading...
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!